மரைன் லைஃப் பார்க் (Marine Life Park)

0
258

சிங்கப்பூரின் தென் பகுதியில் உள்ள செந்தோசா ரிசார்ட் உலகின் ஒரு பாகமாக அமைந்துள்ளது இந்த மரைன் லைஃப் பார்க். 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய கடல்வாழ் உயிரின பூங்காவில் இரு பெரும் பார்வை இடங்கள் உள்ளன. கடல் அக்வாரியம் மற்றும் அட்வெஞ்சர் கோவ் நீர் பூங்கா. இந்த கடல் அக்வாரியத்தில் மிக பெரிய கடல்வாழ் உயிரினங்களை கண்ணாடி வழியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் உலகின் மிகப்பெரிய ஓசினரியம்(Oceanarium) உள்ளது. இந்த பிரம்மாண்ட கடல்வாழ் உயிரின பூங்காவில் 800 வகையான உயிரினங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்த கடல்வாழ் உயிரின பூங்காவில் 4 கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பல வகையான மீன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடல் விலங்குகளையும் மக்கள் தினமும் திரளாக வந்து கண்டு ரசித்தவாறு செல்கின்றனர். 2014ம் ஆண்டு வரை சீனாவின் சிமெலாங் ஓசன் கிங்டம் தான் உலகிலேயே பெரிய மரைன் லைஃப் பார்க்காக விளங்கியது. அதனை முறியடித்து முதலிடத்தை பிடித்த சிங்கப்பூரின் இந்த கடல் பூங்காவிற்கு இதுவரை பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இங்கு மாண்டா ரேஸ் எனப்படும் 20 அடி உயர அதிசய மீன்கள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வண்ணமாக காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு பிடித்த 24 டால்பின்கள், சுத்திப்போன்ற தலை கொண்ட சுறா மீன்கள், ஜப்பானிய சிலந்தி நண்டு, கிட்டார் மீன்கள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை இந்த பூங்காவில் கண்டு ரசிக்கலாம். இங்குள்ள உணவகத்தில் உணவுகளை உண்டாவாறே கடல் விலங்குகளை கண்டு ரசிக்க முடியும்.

கட்டண விபரம்:

பெரியவர்கள் – 112 சி.டாலர்கள்,

குழந்தைகள் – 82 சி.டாலர்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்தால் சலுகை உண்டு.

வடகிழக்கு இரயில் தடத்தில் உள்ள ஹாபௌர் பிராண்ட் இரயில் நிலையத்தில் இருந்து விவோ சிடியில் உள்ள செண்டோசா நிலையத்தில் இருந்து செண்டோசா இரயிலில் ஏறி வாட்டர் பிராண்ட் நிலையத்தில் இறங்கி சுமார் 1 கிமி நடக்கும் தூரத்தில் இங்கு சென்று அடைய முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here