மஸ்ஜித் அல்-அப்ரர் மசூதி

0
501

சிங்கப்பூரின் தெலோக் அய்யர் தெருவில் அமைந்துள்ள மிக பழமையான மசூதி இந்த மஸ்ஜித் அல்-அப்ரர். சிங்கப்பூரின் மத்திய பகுதியான சைனாடவுனில் அமைந்துள்ள இந்த மசூதிக்கு வேறு இரு பெயர்களும் உள்ளன, அவை, குச் பள்ளி மற்றும் மஸ்ஜித் சுலியா என்பனவாகும். ஆனபோதும் அதிகாரப்பூர்வமான பெயர் மஸ்ஜித் அல்-அப்ரர் தான்.

1827-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழ் முஸ்லிம்களால் இந்த மசூதி குடில் வடிவில் அமைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட்டன. பின்னர் 1850 முதல் 1855-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் இதற்கு கல் கட்டிட அமைப்பு உருவாக்கப்பட்டது. 1910-ஆம் ஆண்டு முகமது யூசோப், தம்ப்யப்பா ராரூத்தர், கனிஷா மரைக்காயர், காதர் பக்ஸ் மற்றும் சுல்தான் அப்துல் காதர் ஆகிய ஐந்து பேர் கொண்டு தொண்டு குழு இந்த மசூதிக்காக அமைக்கப்பட்டது. நூறாண்டுகளை கடந்தும் இந்த மசூதி எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படாமல் அதன் பழமை தன்மை மாறாமல் இன்னனும் நிலைத்து நிற்பது இந்த மசூதியின் தனிச்சிறப்பு. தினமும் காலை பாங்கு ஒலிக்கப்பட்டு, இஸ்லாமிய நண்பர்கள் தொழுகை புரிவது வழக்கம். தினமும் 5 வேலை இங்கு தொழுகைகள் நிகழ்கிறது. இஸ்லாமியர்களுக்கே உகந்த ரம்ஜான் மாதத்தில் இந்த மசூதி களைகட்டும். அந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர். மாலை வேலையில், அருமையான நோன்பு கஞ்சி மசூதியில் வழங்கப்பட்டு அவர்களின் அன்றைய நோன்பினை முடிவுக்கு கொண்டு வருவர். அதேபோன்று, முஹரம் போன்ற அனைத்து முஸ்லிம் பண்டிகைகளிலும் மக்கள் ஒன்றாக கூடி அன்பின் வழியாக சகோதரத்துவத்தை பின்பற்றுவர். ஏழை எளியவர்களுக்கு உணவு விருந்து அளித்து உதவி செய்வர்.

இந்த மசூதியின் பிரம்மாண்ட அரங்கில் 800 பேர் ஒரே நேரத்தில் தொழுகை வழிபாடு செய்யும் விதமாக இடம் விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மசூதியை நவம்பர் 19, 1974-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது. இதன் கட்டிடக் கலை இந்தோ-இஸ்லாமிக் முறையில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Address: 192 Telok Ayer St, Singapore 068635

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here