மெர்லியன் பூங்கா

0
259

மெர்லியன் பூங்கா (Merlion Statue Park):

சிங்கப்பூரின் மரீனா பேவின் அருகில் வடிவமைக்கப்பட்டுள்ளது மெர்லியன் பூங்கா. இங்கு காணப்படும் மெர்லியன் என்பது தலைப் பகுதி சிங்கமாகவும், வால் பகுதி மீனாகவும் காட்சியளிக்கும். சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை அடையாளமாகவே இது ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சுற்றுலாத் துறை சின்னம் மாற்றப்பட்டது. 8.6மீ உயரமும் 40 டன் எடையும் கொண்ட இந்த சிங்க சிலையின் வாயில் இருந்து தண்ணீர் ஏரிக்கு பீய்த்து அடிக்கப்படும் காட்சியை சுற்றுலா பயணிகள் தவறாமல் கண்டு ரசிப்பர். சிங்கப்பூர் எனும் பெயரே சிங்கப்புரம் என்பதில் இருந்து தான் வந்தது என்கின்றனர். 1972ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த கடல் சிங்க சிலையை சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ திறந்து வைத்தார். அலெக் பிரேசர்-புரூனர் என்பவர் இந்த அழகிய சின்னத்தை வடிவமைத்தனர். இதுபோன்று மொத்தம் 5 மெர்லியன் சிலைகள் சிங்கப்பூரைச் சுற்றி உள்ளது. செந்தோசாத் தீவிலும் இதே போன்ற சிலை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உள்ளது. மெர்லியன் பார்க்கின் அருகில் இருக்கும் ஆற்றில் படகு சவாரி சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகின்றன.

Address: One Fullerton, Singapore 049213.

கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்கு தடங்களை இணைக்கும் சிட்டி ஹால் மார்ட் நிலையத்திலிருந்து ஸ்டேட்மபோர்ட சாலை வழியாக 800 மீட்டர் தூரம் நடந்தால் இங்கு வர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here