பெரனகன் அருங்காட்சியகம்

0
250


பெரனகன் எனும் ஒருவகை சீனர்களின் பிரத்யேக பாரம்பரியத்தை இன்றளவும் பறைசாற்றி வருகிறது சிங்கப்பூரின் பெரனகன் அருங்காட்சியகம். 3 அடுக்கு பள்ளியாக இருந்து பின்னர் அருங்காட்சியமாக மாறிய இந்த பெரனகன் அருங்காட்சியகம், சிங்கப்பூரின் தேசிய சின்னங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது. இங்கு பெரனகன் சமூகத்தினர் பயன்படுத்திய மண்பாண்டங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அவர்கள் பாரம்பரியத்தை பற்றிய வரலாறு போன்ற பல ஆராய்ச்சி மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட அற்புதங்கள் அங்கு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விரிந்து பரந்து கிடக்கின்றன. நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள 10 அரங்குகள் தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரியமும் பழக்க வழக்கங்களும் நமக்கு வரலாற்று படத்தை எடுக்கும் ஆசிரியர்களாக மாறிப் போகும் அதிசயம் நிறைந்த சுற்றுலா தலம் இது என்றால் அது மிகையல்ல.

சீனாவில் இருந்து அகதிகளாக மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த மக்களால் தான் இங்கு இந்த நாகரிகம் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரனகன் என்றால் மலாய் மொழியில் உள்ளூர் வாசிகள் என்ற அர்த்தம். 1912ல் கட்டப்பட்ட டாவோ நான் பள்ளி தான் பெரனகன் அருங்காட்சியமாக காட்சியளிக்கின்றது. அருங்காட்சியகத்தின் முதல் தளம் இதன் முதல் அரங்கு முற்றிலும் ஆட்கொண்டுள்ளது. Origin எனப்படும் இந்த அரங்கில் அதன் பூர்வீகம் முழுவதுமாக பார்வையாளர்களுக்கு தன்னைப் பற்றி பூரணமாக விளக்குகிறது. இரண்டாம் தளத்தில் 2 முதல் 5 அரங்குகள் உள்ளது. மேலும், மூன்றாம் தளத்தில் 6 முதல் 10 அரங்குகள் உள்ளது. இந்த அரங்குகளில் அவர்களின் உணவு வகை, உணவு பழக்கங்கள், கைவினை பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், ஆடை அணிகலன்கள், பெண்களின் தனி பங்கு போன்ற பல நாகரிக மரபுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கட்டண விபரம்:
பெரியவர்கள் – $6
குழந்தைகள் – $3

Address: 39 Armenian St, Singapore 179941

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here