சன்ஜீ புலோஹ் ஈரநில சரணாலயம்

0
492

சிங்கப்பூரின் வடமேற்கு பகுதியில் உள்ள சன்ஜீ புலோஹ் ஈரநில சரணாலயம் (Sungei Buloh Wetland Reserve) தெற்கு ஆசியாவின் முதல் ஈரநில சரணாலயமாகும். 130 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் சீசன் நேரங்களில் நாடு கடந்து வரும் பறவைகள் இங்கு தங்கி சிறிது காலம் இருந்துவிட்டு பறந்து செல்லும்.

அரசாங்கத்தால் பெரிதும் கண்டுக் கொள்ளப்படாத இந்த சரணாலயம் 1986-ஆம் ஆண்டு தான் பிரபலமடைந்தது. மலேசியாவின் தேசிய அமைப்பின் சிங்கப்பூர் கிளை இயற்கை நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பொருட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், இந்த இடத்தை சிங்கப்பூர் அரசு தனது அரசு கோப்பில் சேர்த்து பராமரிக்கத் தொடங்கியது.

1989-ஆம் ஆண்டு தான் தேசிய பூங்கா அந்தஸ்து அளிக்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அப்போதைய சிங்கப்பரின் பிரதமர் கோ சோ டோங், இதனை மக்கள் பார்வையிடும் சுற்றுலாதலமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் இதன் இயற்கை வளத்தை கண்டு களிக்க டிரெக்கிங் செய்வது வழக்கம். நண்டு, ஓடு மீன், நிலம் மற்றும் நீர் இரண்டிலும் வாழும் மீன்கள் உள்ளிட்ட பல அற்புதங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும். செப்டம்பர் முதல் மார்ச் மாத பருவ காலக்கட்டத்தில் இங்கு வெளி நாடுகளிலிருந்து குடிபெயரும் நீர்பறவைகளான சாண்ட்பைப்பர் மற்றும் புலோவர்ஸ் வகை பறவைகளை இங்கு கண்டுகளிக்கலாம்.

இயற்கை பாதையில் நடைபயணம், பறவைகள் பார்வை இடம், போட்டோகிராபி போன்ற பல சுவாரஸ்ய அனுபவங்களை இந்த சரணலாயம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த சரணாலயத்தை பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சரணாலயம் திறக்கப்படுகின்றது.

Address: 301 Neo Tiew Crescent Singapore 718925.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here