சியாட்டில் தமிழ்ச் சங்கம்

0
424

சியாட்டில் தமிழ்ச் சங்கம் இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழையும் வளர்ப்பதில் ஒவ்வொரு ஆண்டும் முழு முனைப்புடன் செயல்பட்டு வெற்றிகரமாக பல்வேறு நிகழ்ச்சிகளை செவ்வனே நடத்துகிறது என்பதை வாஷிங்டன் மாகாண இந்திய மக்கள் அறிவர்.

எங்களுக்கு உறுதுணையாக இருந்து எங்களை பல நிகழ்ச்சிகள் நடத்த பலமாக நிற்கும் சியாட்டில் வாழ் தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

பொங்கல் விழா, சிறப்பு விருந்தினர் விழாக்கள், வாழையிலை விருந்து, பந்தல், தீப ஒளி திருநாள் என ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். இந்த நிகழ்ச்சிகள் மூலம் ஈட்டும் வருவாயை பல்லாயிரம் மக்கள் பயனடையும் வண்ணம் நன்கொடையளித்து செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு நன்மைகளும் அளிக்கப்படுகிறது.

இவையனைத்தும் தன்னார்வலர்களின் தொண்டினால் மட்டுமே சாத்தியமென்றால் மிகையாகாது. இவ்வாண்டின் சிறந்த காரியதரிசிகள் மற்றும் தலைசிறந்த மன்ற குழுவினர்களின் தன்னலமற்ற சேவையே இந்த வெற்றிகளுக்கு காரணம்.

சியாட்டில் தமிழ்ச் சங்கம் மென்மேலும் பல அறிய நிகழ்ச்சிகளை சியாட்டில் வாழ் தமிழ் பாராட்டும் மக்களுக்கு அளிக்குமென்பதை உறுதியுடன் கூற கடமைப்பட்டுள்ளது. எந்த சந்ததியினரும் தன் திறமையினை மேடையேற்ற உறுதுணை செய்யும். தமிழ்ச் சங்கத்திற்கு உங்கள் ஆதரவினை என்றென்றும் அளித்து பயனடையுமாறு வேண்டி வணங்குகிறோம்.

இணையமுகவரி: www.seattletamilsangam.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here