செம்பவாங் செல்வக் கடவுள் கோயில்(Sembawang God of Wealth Temple)

0
445


இந்து கடவுள்களில் செல்வத்திற்கு அதிபதியாக குபேர கடவுளை மக்கள் வழிபடுவர். சீனாவில் அதே போன்ற வழிபாடு முறை உள்ளது. சிரிப்பு புத்தர் என்று சொல்லி வழிபடும் கடவுள் புத்தமத வழிபாட்டில் உள்ளது. செம்பவாங் செல்வக் கடவுள் அதே போலத் தான். மக்கள் செல்வச் செழிப்போடு வாழவும், கடன் தொல்லைகள் அழியவும் அருள்பாலித்து வருகிறார். சுமார் 20,000 சதுர அடியில் 3 மில்லியன் டாலர்கள் செலவில் சீன கலை நயத்துடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. 1988-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து சாம்பல் நிற கல்லால் ஆன சிலை கொண்டு வரப்பட்டது. பெங் லாய் டையன் மற்றும் செம்பவாங்க் டையன் ஹோ கெங் இருவரும் ஒன்றிணைந்து 2004-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் இந்த கோயிலைக் கட்டி முடித்தனர். கோயிலின் மேற்கூரையில், 31 அடி உயர செம்பவாங் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 8 டன்கள். கோயிலின் அஸ்திவாரம் மேற்கூரையில் இருக்கும் செம்பவாங் சிலையை தாங்கும் வண்ணம் மிகவும் உறுதியுடன் கட்டப்பட்டுள்ளது. 24 காரட் தங்கத்தினால் ஆன 1,20,000 தங்க இலைகள் கொண்டு செல்வக் கடவுள் சிலை வேயப்பட்டது. இக்கோயிலின் தனி சிறப்பு என்னவென்றால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் செல்வக் கடவுளை மிகவும் அருகில் சென்று அவரது அருளாசியை பெற முடியுமாம். அதுவும் அவரது பிறந்த நாளன்று தான். 4 மாடி கட்டிடக் கோயிலான இதன் கீழ் தளத்தில் மட்டும் மக்கள் 24 மணி நேரமும் இலவசமாக வந்து வழிபாடு செய்யலாம். பக்தர்கள் அவர்கள் விரும்பிய காணிக்கைகளை கோயில் நிர்வாகத்துக்கு அன்பளிப்பாக வழங்கலாம். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் சிங்கப்பூர் வாசிகள் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். செல்வம் அனைவருக்கும் தேவையல்லவா!

Address: 28 Admiralty St, Singapore 757611

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here