அயல் இந்தியர் தினம் 2018 – சிங்கப்பூரில் நடைபெறும் ப்ரவசி பாரதிய திவாஸ்

0
417

ஆசியான் பிரவசி பாரதிய திவாஸ் 2018:

பிரவசி பாரதிய திவாஸ் எனும் அமைப்பு சர்வதேச நாடுகளில் உள்ள இந்தியர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். இந்திய சமுதாயத்தை அரசுடன் வலுப்படுத்தவும் அவற்றின் வேர்களை ஆராய்ந்து அதன் திறமைக்கேற்ப கெளரவங்களையும் வழங்குவதும் இந்த PBD என அழைக்கப்படும் Pravasi Bharatiya Divas அமைப்பின் நோக்கமாகும். இதுவரை 13 PBD மாநாடுகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.

ஒவ்வொரு மாநாட்டின் போதும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கெளரவிக்கும் விதமாக பிரவசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டு அவர்கள் அங்கீகரிக்கப் படுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், இதன் அமைப்பை மேலும், வலுப்பெறச் செய்யும் விதமாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை பெரிதும் அங்கீகரித்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை டில்லிக்கு வெளியே இதன் மாநாடு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தது.

பிப்ரவரி 2016ல் நடத்தப்பட்ட முதல் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை உரையாடலின் அடிப்படையில் அறிந்துக் கொண்டது.

இந்த 2018ம் ஆண்டிற்கான ஆசியான் இந்தியா பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் சிங்கப்பூரில் உள்ள மரீனா பே சான்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது. https://www.pbdsingapore2018.org/venue இந்த இணையதளத்தில் முன்பதிவவு செய்து இதில் பங்குபெறலாம்.

தொடர்புக்கு:

 ASEAN India PBD Secretariat

De Ideaz Pte Ltd

101 Cecil Street, 25-06 Tong Eng Building, Singapore 069533

Tel: +65 6223 7276 / +65 6223 7782

Email:   secretariat@pbdsingapore2018.org

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here