சிங்பொரிமோ தமிழ்

0
499

சிங்கப்பூர் கவிதை எழுதும் மாதம்

சவால்: 1 ஏப்ரல் 2018 முதல் 30 ஏப்ரல் 2018 வரை 1 கவிதை எழுதுவேன்

வழிமுறைகள்:

– ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையை எழுதுங்கள். ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் கருப்பொருள் அல்லது கட்டளைகளை வைத்து நீங்கள் கவிதை எழுதலாம். நீங்கள் உங்களுக்கு விருப்பமான கருப்பொருளைக்கொண்டும் கவிதை எழுதலாம்.
– உங்கள் இடுகையில், # spwmtamil18 # spwmtamil18dayX #உங்கள்பெயர் #சிங்பொரிமொதமிழ்2018 போன்ற hashtag பயன்படுத்தலாம். உங்கள் கவிதைகளுக்கு கருத்துக்கள் பெறாதாவிட்டால் மனச்சோர்வு பெறாதீர்கள், இது ஒரு போட்டி அல்ல.
– இங்கே ஒவ்வொரு கவிதையும் இறுதி முயற்சி அல்ல. இந்த கவிதைகள் 24 மணி நேரத்திற்குள் எழதப்பட்ட முதல் draft மட்டுமே.

இந்த முயற்சிக்கான குறிக்கோள்:

எழுத விரும்பும் நபர்களையும், எழுதிக்கொண்டிருக்கும் வளரும் எழுத்தாளர்களும் பயிற்சி பெறுவதற்கு இது ஒரு ஆதரவான தளமாக அமைவதே இந்த சிங்போரிமோவின் நோக்கமாகும்.

சிங்போரிமோ (சிங்கப்பூர் கவிதை எழுதும் மாதம்) தமிழ் பேஸ்புக் பக்கம் ஒரு 30-நாள் தமிழ் கவிதை எழுதும் சவாலாக இருக்கும். மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளையர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பேஸ்புக் பக்கத்தை பின்பற்றி சவாலில் கலந்து கொள்ளலாம். கவிதை எழுதுவதில் அனுபவம் உள்ள சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள், ஒரு கருப்பொருளை அல்லது கருத்தை ஒரு நாளுக்கு ஒரு முறை பேஸ்புக் பக்கத்தில் வழங்குவார். ஒவ்வொரு எழுத்தாளரும் 5-7 நாட்களுக்கு கருப்பொருளை வழங்குவர்.

அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட எழுத்தாளர்கள் பேஸ்புக் கருத்துக்களில் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எழுதுவார்கள. பேஸ்புக் பக்கத்தில் உள்ள பங்கேற்பாளர்கள் அந்த 30 நாட்களில் தினசரி வழங்கப்படும் கருப்பொருள்களை வைத்து தொடர்ந்து எழுத ஊக்குவிக்கப்படுவார்கள்.

சில கேள்விகளுக்கு பதில்:

Q1: நான் சேர ஒரு எழுத்தாளராக இருக்க வேண்டுமா?
பதில்: நீங்கள் சேர விரும்பினால் நீங்களும் ஒரு வகையில் “எழுத்தாளர்” தான்

Q2: என் நண்பர்களை நான் அழைக்கலாமா? இது ஒரு மேல்தட்டு எழுத்தாளர் மட்டும் குழுவா?
பதில்: நீங்கள் விரும்பும் அனைவரையும் சேர்க்கலாம்.

Q3: மற்ற மக்களின் கவிதைகள் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பலாமா?
பதில்:ஆமாம்

Q4: “ஒரு நாளைக்கு” என்பது என்ன?
பதில்: 00:00 முதல் 23:59 வரை, எஸ்.ஜி. நேரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here