ஸ்ரீ அருள்மிகு வேல்முருகன், ஞானமுனீஸ்வரர் ஆலயம்

0
566

செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும் ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும். நவீன கட்டிட வடிவமைப்பில் பல உன்னதங்களைப் பெற்றுள்ளது.  அதே வேளையில் தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்தின் அலங்காரக் கலைநயம், சிற்பங்கள், பிரமிக்க வைக்கும் கூடங்கள், சன்னிதிகள் யாவும் மாறுபட்ட கலையழகுடன் அமைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பிரதான சன்னிதிக்கு உயரே மாடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமான கோபுரத்திலிருந்து மாறுபட்டது. மண்டபத்துக்கு வெளியிலும் நடைபாதைகளிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை மெய்மறக்க வைப்பவை.

ஆரம்ப காலங்களில் தஞ்சோங் பகார் துறைமுகப் பகுதியில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வந்தார். அப்பகுதியிலேயே அமைந்திருந்த மலாயன் இரயில்வே குடியிருப்புகளிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். 1960 ஆண்டு சீலாட் சாலையில் அருள்மிகு வேல் முருகன் கோயில் கட்டப்பட்டது. அப்பகுதி வாழ் இந்தியருக்கு இந்த அருள்மிகு வேல் முருகன் ஆலயம் சமய வழிபாடு தேவைகளை நிறைவேற்றி வந்தது. பங்குனி உத்திரத்தன்று காவடிகள் தூக்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திவர்கள் இன்றும் நினைவு கூறுகிறார்கள். இந்தக் கோயில்கள் அமைந்திருந்த இடங்கள் நகர மேம்பாட்டிற்கு இடம் கொடுக்க வேண்டி இருந்ததால் மாற்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  பின்னர் ரிவர்வேல் கிரசண்டில் இரு ஆலயங்களும் ஒரே கோயிலாக கட்டப்பட்டு மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு தந்தை ஈசனின் அருளும் தனயன் முருகனின் அருளும் ஒரு சேர கிடைக்கின்றது.

Address: Velmurugan, Gnana Muneeswar Temple, 50, River Vale Cresant, Singapore.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here