ஸ்ரீ கிருஷ்ண மந்திர்

0
427

உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் புகழை பரப்பும் வகையில், செயல்பட்டு வரும் இஸ்கான் கோயில் நிர்வாகம், 1970-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு காலடி எடுத்து வைத்தபோது அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரின் விமான நிலையத்தில் எந்த தேசத்திலும் நடக்காத அளவுக்கு இஸ்கான் நிறுவன ஆச்சார்யா முதன் முறையாக தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், சிங்கப்பூரில் இருந்த ஸ்ரீமான் சுந்தர் கோபால் தாஸ், அவர்களால் சிங்கப்பூரில் இஸ்கான் கோயில்
1977-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி காலூன்றப்பட்டது.

1982-ஆம் ஆண்டு பகவத் கீதையின் அத்தனை தத்துவங்களும், இந்த கோயிலைச் சுற்றி முதன்முறையாக பொறிக்கப்பட்டது. இந்த யோசனை பின்னர், உலகின் பிற நாடுகளில் உள்ள இஸ்கான் கோயில்களிலும் அமல்படுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு. இக்கோயிலின் சார்பாக செராங்கூன் பிளாசாவில் கோவிந்தா கிப்ட் எனும் ஆன்மிக பொருட்கள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் விற்கும் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்க என உலகின் பல நாடுகளில் அந்த காலக்கட்டத்தில் தான் கிருஷ்ணரின் புகழை பரப்பும் இந்த இஸ்கான் நிறுவனம் பிரபலமடைய தொடங்கிய காலமாகும்.

ஆனால், ஆங்கிலேயர்களின் ஆதிக்க காலக்கட்டத்தில் எதிர்பாராதவிதமாக இந்த கோயில் மவுண்ட்பேட்டன் கைகளுக்குள் சென்றது. பின்னர் பல கட்ட போராட்டம் மற்றும் அதிகமான பொருட்சேதத்துக்குப் பிறகு மீண்டும் இஸ்கான் கோயிலை மீட்டனர். ஆனால், சிங்கப்பூர் அரசு, இஸ்கான் எனும் வார்த்தையையும் அதன் ஆதிக்கத்தையும் இங்கு பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டது. அதன்பேரில், ஸ்ரீ கிருஷ்ண மந்தீர் என்ற பெயரில் இன்றளவும் இக்கோயில், ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களின் பக்தி பஜனைகளில் வாழ்ந்து வருகிறது. 2000-ஆம் ஆண்டில் பலெய்ஸ்டர் சாலையிலிருந்து இடம் மாற்றப்பட்டு கெய்லாங் பகுதிக்கு இடமாற்றம் கண்டு இன்றளவும் அங்கேயே பிரபலமடைந்து வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ண மந்தீர் கோயில், ஒரு கோயில் மட்டுமின்றி, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் வாழ்க்கை அருங்காட்சியகமாகவும் திகழ்ந்து வருகிறது. இஸ்கான் நிர்வாகம், லிட்டில் கிருஷ்ணா போன்ற 3டி கார்ட்டூன் படங்களையும் எடுத்து திரையிடுகின்றனர்.

Address: No.9 Lorong 29 Geylang, #03-02, Singapore 388065

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here