ஸ்ரீ மாரியம்மன் கோயில்

0
674

சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் சாலையில்(South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில். மாரி என்றால் மழை. மழை வேண்டி மக்கள் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். அவர்களுக்கு மழையாக அருளை வாரி வழங்கிய தெய்வத்தை மாரியம்மன் என்று ஆதி முதலே வணங்கி வருகின்றனர். மாரியம்மன் ஏழை மக்களின் துயர் துடைக்கும் பெருந்தெய்வம்.

1827-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் திறக்கப்பட்டது மாரியம்மன் கோயில். அம்மை போன்ற நோய் நொடிகளை விரட்டி அடிக்கும் அபார சக்தியுடையவள் மாரியம்மன். முதலில் தெலாக் அயர் வீதியில் தான் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், சுத்தமான தண்ணீர் அங்கு இல்லாத காரணத்தால், 1821-ஆம் ஆண்டு சவுத் பிரிட்ஜ் சாலைக்கு மாற்றப்பட்டது. திரு. நாராயண பிள்ளை அவர்கள் 1823-ஆம் ஆண்டு அனுமதி அளித்தப் பின், இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1827-ஆம் ஆண்டு மக்கள் வழிபாட்டுத் தலமாக தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள மற்ற கோயில்களை விட இந்த ஆலயத்திற்கு உள்ள தனிச் சிறப்பு என்னவென்றால், சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலாக இடம் மாறாமல் அதே இடத்தில் நிலைத்து நிற்பது தான். 1827-ஆம் ஆண்டிற்கு பிறகு கோயில் ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு வந்தது. 1962-ஆம் ஆண்டில் ஆலயத்தின் தற்போதுள்ள புதிய வடிவம் வடிவமைக்கப்பட்டது. மேலும், ஆலயத்தினுள் புதிய அரங்குகள், 3 அடுக்கு காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை கட்டப்பட்டன. அங்கு திருமணங்கள், ஆன்மிக கல்வி சொற்பொழிவுகள், ஆன்மிக போட்டிகள் போன்றவை பள்ளி மாணவர்களிடையே ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும்.

ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தீமிதி திருவிழா தான். அக்டோபர் அல்லது நவம்பர் காலக்கட்டத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்துக் கொள்ள ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தீமிதித்து அம்மனை வழிபட்டுச் செல்வர். மேலும், நவராத்திரி மற்றும் 1008 சங்காபிஷேகம் உள்ளிட்ட முக்கிய விழாக்களும் கோலாகலமாய் நடைபெறும். மூலவர் மாரியம்மனை தொடர்ந்து இந்த ஆலயத்தில் ஸ்ரீராம,லஷ்மண சீதா, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீஅரவான், கணேசர் மற்றும் சிவபெருமன் ஆகியோரும் வீற்றுள்ளனர்.

Address: 244 South Bridge Road Singapore 058793

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here