ஸ்ரீ முருகன் மலை கோயில்

0
684

தமிழகத்தில் முருக பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் எனும் பழமொழி சைவ மதத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே சிங்கப்பூரிலும் முருகனுக்கு மலை கோயில் உண்டு. 1962-ஆம் ஆண்டு சண்முகம் எனும் குழாய் செப்பனிடுவர்(Plumber) லாம் சான் மலைக் கிராமத்தில் முருகன் கோயிலை குடிசைக் கோயிலை ஆர்.ஏ.எப்.பில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் கட்டினார். சிறிது காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் ஆலயம் உட்பட அருகில் இருந்த அனைத்து பகுதிகளும் தீக்கிரையாகின. அதன் பின்னர் கோயிலுக்கு நிலம் அளிக்க தற்போதைய ஆலய தர்மகர்த்தாவாக உள்ள நாகலிங்கம் என்பவர் மறுத்துவிட்டார். ஒரு செவ்வாய்க் கிழமை இரவு நாகலிங்கத்தின் கனவில் வயதான தோற்றத்தில் வெண்ணிற ஆடை உடுத்தி வந்த முதியவர் ஒருவர், போ போய் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடு என்று உத்தரவிட்டுள்ளார். தனது கனவில் வந்தவர் முருகப் பெருமான் தான் என உணர்ந்த அவர், அங்கு ஆலயம் எழுப்பி இன்று வரை அதனை பராமரித்து வருகிறார். அன்றிலிருந்து அவருக்கு முருகன் அருள் குறையவே இல்லை.

பிப்ரவரி 21,1973-ஆம் ஆண்டு கோயிலின் 2000சதுர அடி நிலத்திற்கு தற்காலிக குடியுரிமை வழங்கப்பட்டடு. அனைத்துமே சுமுகமாய் சென்றுக் கொண்டிருந்த நிலையில், 1983-ஆம் ஆண்டு நகரமயமாக்கல் திட்டம் இந்தக் கோயிலையுன் ஒரே நிலையான இடத்தில் இருக்க விடவில்லை. கோயில் இருந்த இடத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் தள்ளி தற்போது உள்ள மேல்புற புகித் திமா சாலையில்(Upper Bukit Timah Road) நிலைக் கொண்டது. அங்கிருந்த புத்தர் கோயில் ஒன்றின் எதிரில் முதலில் இடம் வழங்கப்பட்டது. பின்னர் ஆலய நிர்வாகிகள் பேசி, சற்று அருகமையில் கோயிலை நிறுவினர். 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆலய பணிகள் 1993-ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. பங்குனி உத்திரத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் மாலை அணிந்து காவடிகள் தூக்கி தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். அரோகாரா எனும் நாமம் ஆலையம் முழுக்க பக்தர்களின் வருகையால் எப்போதுமே ஒலித்துக் கொண்டு இருக்கும். கோயிலுக்கு அருகே திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. முருகன் கோயில் திருமணங்களுக்கு மிகவும் விசேஷம் என்பதால், இந்த ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். சிவ-சக்தி என்று பெற்றோருடனும், அண்ணன் கணபதியுடனும் இக்கோயிலில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Address: 931, Upper Bukit Timah Road

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here