ஸ்ரீருத்ர காளியம்மன் ஆலயம்

0
539

சிங்கப்பூரின் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா செங்கல் சூளைப் பகுதியின் ஒரு மூலைப் பகுதியில் சாதரண கோயிலாக உருவானது தான் இன்று பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம். 1913-ஆம் ஆண்டில் பலகை கட்டிடமாக, சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த திரு. லட்சுமணன் நாடார் என்பவரின் முயற்சியால் தான் இந்தக் கோயில் ஆரம்பத்தில் உருவானது.

1923-ஆம் ஆண்டில் அலெக்சாண்ட்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமான போர்னியோ கம்பெனியின் ஆதரவில், செங்கல் கட்டிடமாக மாறியது. செங்கல் சூளை இந்து ஊழியர்கள், பக்கத்து வட்டார இந்து பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டு தான் இக்கோயில் இயங்கி வந்தது. 1968-ஆம் ஆண்டில் தான் ருத்ர காளியம்மன் சுதை சிலைக்கு பதிலாக புதிய கருங்கல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1972-ஆம் ஆண்டில் ஆலய நிர்வாகத்தினர் கோயில் நிலத்தை சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்திடம் 260,000 சிங்கப்பூர் வெள்ளிகளைக் பெற்றுக் கொண்டு விற்று விட்டனர்.

பின்னர் 1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ரகாளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளியம்மன் கோயில் எழுப்பப்பட்டது. 2003-ஆம் ஆண்டு இங்கு 65 அடி உயர இராஜ கோபுரம் எழுப்பப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிங்கப்பூரில் உள்ள இந்துக்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலை காண தவறுவதில்லை. ருத்ர காளியம்மன் கோயிலில், சிவனுடன் சேர்த்த சக்தி சிலை, தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய கலைமிகுந்து சிலைகளும் இவ்வாலய பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ வழிபாடுகளும் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

Address: 100, Depot Road, Singapore, 109670.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here