ஸ்ரீ சிவதுர்கை கோவில்

0
580

தென்கிழக்கு ஆசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலே மண்ணுமலை (பொத்தோங் பாசிர்) என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளது இந்த ஸ்ரீசிவதுர்கை கோவில். ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயில், ஆரம்ப காலத்தில் பழைய ரூமா மிஸ்கின் என்ற இடத்தில் அமைந்திருந்தது. அந்த இடம் காவல் துறை இருந்த இடமுமாகும். அவ்வாழ் மக்களின் பெறும் முயற்சியின் காரணமாக செயின்ட் ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.  1962- ஆம் ஆண்டில், திரு.பி. ரெங்கநாதன், திரு.அருணாசலம் போன்ற பெரியவர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே ரதம் ஒன்று கட்டிக் கொடுக்க, திரு. கே.கே. இராமசாமி என்ற பக்தரின் பெருமுயற்சியால், ரத ஊர்வலத்துடன் காமன் பண்டிகை போன்ற பெருவிழா கொண்டாடப்பட்டது. 1965-ம் ஆண்டு மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று, புதிய அமைப்பில்,கோயில் கட்ட எண்ணினார்கள் ஆலய நிர்வாகிகள். கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. வீ.ஆர். கோபால் சாமி, தனது சொந்தச் செலவிலேயே துர்க்கா லட்சுமி சிலை அமைத்து, அதன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். நகர மறுசீரமைப்பு வீடமைப்பு நிலம் அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டதால் இப்போதுள்ள பொத்தோங் பாசிர் பகுதியில் 1000 சதுர மீட்டர் நிலத்தினை 280,000 வெள்ளிக்கு வாங்கப்பட்டு, புதிய இடத்தில் வேத முழக்கத்தோடு 22.1.1983 -ஆம் ஆண்டு பால ஸ்தாபனம் செய்யப்பட்டது.

கோயில் அமைப்புகள் பொதுவாகப் பேரண்ட சிற்றண்ட அமைப்பின் பின்னணியொத்தது. பேரண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றண்டம் என்பது மனித உடலையும் குறிக்கும். பேரண்டத்திலுள்ள எல்லாம் சிற்றண்டத்திலும் உள்ளது. பிரபஞ்சத்தின் சிறு வடிவம்தான் மனிதன்.பேரண்டத்தின் ஜீவ சக்தி ஈஸ்வரன். அவனே பிரபஞ்சத்தில் மனிதனின் ஆத்மாவாகவும் இருக்கிறான். புதனே சுவாசப்பை, சுக்கிரனே இருதயம், சூரியனே மூளை, அங்காரகன் கை, சந்திரனே வயிறு, குரு குறி, சனி கால்கள், கோயில்களே சிவம். இத்தகைய கோயில் பொதுவாகக் கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், விருஷ மண்டபம், பிரகாரம், பலிபீடம், கொடி மரம், பரிவார ஆலயங்கள், கோபுரம், திருக்குளம், மதில் ஆகிய அங்கங்கள்  கொண்டு சிறப்பாக ஸ்ரீசிவதுர்கை கோயில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது.

இக்கோயிலின் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய துர்கை அம்மன் சிலை தெற்கிலிருந்து வடக்காக இருக்கிறது.  இவ்வாலயத்தில் முக்கிய, விஷேச பூசையாக ராகுகால துர்கா பூசையும்,வழிபாடுகளும் நடக்கிறது. அ டுத்து சிவராத்தியின் போது நான்கு கால பூசைகள் சிறப்பாக கொண்டாப்படுகிறது. ஆரம்பத்தில் சிவன் கோயிலாக பிரபலமடைந்த வேளையில் மதுரையிலிருந்து கோயிலில் பணியாற்ற வந்த இலங்கை வம்சாவளி சிவாச்சாரியாரால் சிங்கையில் முதன் முதலில் இங்கு துர்க்கையம்மனுக்காக விளக்குப் பூசையைத் தொடங்கிவைத்தார். அது பெண்களிடையே மிகவும் பிரபலமானது பின்னர் துர்கை சிலை நிறுவப்பட்டு சிவதுர்கை கோயிலாக உருமாறியது இக்கோயிலின் தல வரலாறு. சிங்கப்பூரில் ஆன்மிக தேடலை தேடி வரும் சுற்றுலா பயணிகளின் பிரபல சுற்றுலா தலமாக இது விளங்குகிறது.

Address: 8 Potong Pasir Ave. 2Singapore 358362.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here