ஸ்ரீசிவன் கோயில், சிங்கப்பூர்

0
650

சிங்கப்பூரில் உள்ள கேலாங் பகுதியில் குடிகொண்டுள்ளது ஸ்ரீசிவன் கோயில். 1850-ஆம் ஆண்டு, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, பீகார், உத்திரபிரதேசம் ஆகிய ஊர்களில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்கள், சைவ மதத்தை சிங்கப்பூரில் பரப்ப சிவ ஆலயம் ஒன்று உருவாக்க்கப்பட்டது. காசியில் இருந்து லிங்கத்தை எடுத்து வந்து இந்த கோயிலில் ஸ்தாபிதம் செய்ததாக நம்பப்படுகிறது. மண்மலை என அழைக்கப்படும் பொத்தோங் பாசிரில் முதன்முறையாக சிவ லிங்கம் நிறுவப்பட்டது.

பின்னர் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த லிங்கம் டோபிகாட்டின் கீழ்கோடிக்கும், பிறகு இப்போது உள்ள மெக்டோனால்ட் ஹவுஸ் எனும் கட்டத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கும், பிறகு எம்.ஆர்.டி எனும் விரைவு ரயில் நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கும் மாற்றம் கண்டு, இறுதியாக தற்போது அமைந்திருக்கும் கேலாங் வீடமைப்பு பேட்டைக்கு மாறியது. லிங்கத்தைக் கொண்டு வந்த அதே கப்பலில் பயணம் செய்த பால்காரர்களும் சிப்பாய்களும் தங்கள் நீண்ட பயணத்தின் போது அதை ஒவ்வொரு நாளும் மெருகேற்றியதாகவும் அதனால்தான், லிங்கம் பளிங்குபோல் பளபளப்பாக காட்சியளிக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். 1960-ஆம் ஆண்டு ஃப்ரீ பிரஸ்(Free Press) எனும் சிங்கப்பூர் செய்தி தாளில் இந்தக் கோயிலின் ஆண்டு பிரதி பிரசுரிக்கப்பட்டது. அதில், இந்தக் கோயில் லிங்கம் சிதம்பரத்திலிருந்து ஒரு சமய பெரியாரால் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கிறது.

இந்தக் கோயில் லிங்கத்தின் மூலம் எதுவாக இருப்பினும் ஆர்ச்சர்ட் ரோடு ஆலயத்தில் 1850-ஆம் ஆண்டுக்கு முன்னரே வழிபட்டு வரப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. சிவன் கோயிலில் அம்மன் சிலை இல்லாததை உணர்ந்து 1964-ஆம் ஆண்டு காசி விசாலாட்சி அம்மனை போன்ற சிலையை இங்கு இந்து அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது சிலர் கோயிலில் தஞ்சமடைந்தனர். கோயிலைச் சுற்றி விழுந்த குண்டுகள் கோவிலையும், சிலைகளையும் சேதப்படுத்தின. சேதமடைந்த சிலைகளின் புகைப்படங்கள் கோப்பிலிருந்ததால் அப்படங்களைக் கொண்டு உள்நாட்டு சீனக் கொத்தனார் ஒருவர் புதிய சிலைகளை உருவாக்கி கொடுத்தார் என்ற சிறப்பு சம்பவர் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. ஆலயத்தின் முக்கிய விழா நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, குருபெயர்ச்சி மற்றும், சமய விழாக் கால் நிகழ்வும் நடைபெறுகின்றன.

Address: 24, Geylang East Av.2, Singapore 389752

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here