ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில்

0
705

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியின் அருகில் உள்ள செரங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில். இந்தக் கோயில் 1830-ஆம் ஆண்டு ஒரு தனி பெண் பக்தையால் துவக்கப்பட்டது. ஆலமரம் ஒன்றின் அடியில் காளியம்மன் படம் ஒன்றை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். பின்னாளில் அது தான் இன்று பெரிதாய் உருவாகியிருக்கும் வடபத்திர காளியம்மன் கோயிலின் மூல ஆதாரம்.

பின்னர் பல ஆண்டுகாலத்திற்கு பிறகு 1935-ஆம் ஆண்டு திரு. ரங்கசாமி என்பவர் தனது ஓய்வூதிய பணத்தை கொண்டு இதனை சிறிய அளவு கோயிலக உருவாக்கினார். மக்கள் பெருமளவில் இங்கு வருகை தந்து அம்மனை வழிபடத் தொடங்கினர். 1943-ஆம் ஆண்டு திரு. கொட்டாவி கோவிந்தசாமி என்பவர் கோயிலை மேலும் பெரிதாக விரிவுப்படுத்தினார். பெரியாச்சி, மதுரை வீரன் மற்றும் முனீஸ்வரனை வைத்து வழிபட தொடங்கினார். ஆடி மாசத்தில் கூழ் ஊற்றி கோயில் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர். மாடுகள் பூட்டிய வண்டியில் அம்மனை அலங்கரித்து திருவீதி உலாவும் நடத்தினர். இதனால் அந்த பகுதி சுற்றுவட்டார மக்களிடையே வடபத்திர காளியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது.

கோவிந்தசாமியின் எதிர்பாராத மரணத்திற்கு பின்னர் 1948-ஆம் ஆண்டு கோயிலின் நிர்வாகம் திரு. எஸ்.எல். பெருமாள் அவரின் கைகளுக்குச் சென்றது. அவருடன் முருகையன், சாமியப்பன், வைரப்ப தேவர் மற்றும் தங்கவேல் ஆகிய் அன்பர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆலயத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டனர். அன்று முதல் கோயில் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியைக் கண்டது. 23 ஜனவரி, 2005ல் கோயில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு நிகராக இந்தக் கோயிலின் வழிபாடுகள் அன்றாடம் நடத்தப்படுகின்றதாம். முக்கிய விழாக்களாக துர்கை பூஜை, நவராத்திரி திருவிழா, ஆடி திருவிழா போன்றவை இக்கோயிலில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

Address: 555 Serangoon Rd, Singapore 218174

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here