ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் கோயில்

0
519

செராங்கூனில் முதன்முதலாக கட்டப்பட்ட பழமையான இந்து ஆலயம் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் கோயில். ஆரம்பக் காலக் கட்டத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த இந்தியர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே செராங்கூன் சாலை சீரான வடிவத்துக்கு வந்தது. சிங்கப்பூரின் செராங்கூன் பகுதியில் அதிகமான இந்தியர்கள் அகதிகளாக வசித்து வந்ததால், அது இந்தியர்கள் வாழும் பகுதியாக ஆங்கிலேயர்களால் அங்கீகரிக்கப்பட்டது. லிட்டில் இந்தியா பகுதியும் இந்தியர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மலர்ந்தது. ஆரம்ப காலக் கட்டத்தில் இங்கு குடியமர்ந்த இந்தியர்கள் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வந்தனர். மாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்து வாணிபத்தில் சிறக்க தொடங்கினர். மாதுளை தொழிற்சாலைகளும் இந்தியர்களால் இங்கு ஆரம்பிக்கப்பட்டு நல்ல லாபத்தையும் சிங்கப்பூரில் இந்தியர்களின் தரத்தையும் உயர்த்தின. அவர்களின் வியாபாரங்கள் விருத்தி அடைய, எதிரிகள் ஒழிய அவர்கள் வேண்டி வழிபடும் வழிபாட்டுத் தலமாக வீரபத்திர காளியம்மன் கோயில் உருவானது. ஆனால், ஆலயம் எந்த ஆண்டு யாரால் உருவாக்கப்பட்டது என்ற துல்லிய வரலாறு இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

ஆதி காலத்தில் இந்த ஆலயத்தை சுண்ணாம்பு கம்பம் கோவில் என்றும் அழைத்துள்ளனர் என்ற செவி வழி கதை கூறப்படுகிறது. சுண்ணாம்பு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த மக்கள் இதனை கட்டியிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. 1908-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து காளியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு ஸ்தாபனம் செய்துள்ளனர். 1938-ஆம் ஆண்டு கோயிலுக்கான பிரத்யேக தேர் வாங்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக இந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னுயிரை காப்பாற்றிய பெருமை இந்த ஆலயத்திற்கு உண்டு. தேர் ஊர்வலம், ஊர்மக்கள் சேர்ந்து வடம் பிடித்து இழுப்பது போன்ற விழாக்கள் இங்கு திருவிழா கோலத்தில் நடைபெறும். 1983-ஆம் ஆண்டு கோயில் 2.2 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டு கால இடைவெளியில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆலய நடை திறக்கப்பட்டு இருக்கும் பின்னர், நடை சாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபட திறக்கப்படும். இந்த ஆலயத்தில், பெரியாச்சி, சிவன், ராமர், துர்கை, விநாயகர், முருகன், இடும்பர், நாகர், பைரவர் மற்றும் நவகிரக சன்னிதானமும் உள்ளன. மிக பழமை வாய்ந்த இந்துக் கோயில் என்பதால், சுற்றுலா வரும் பக்தர்கள் தவறாது வீரம்மா காளியை வழிபட்டு செல்வது வாடிக்கை.

Address: 141, Serangoon Road, Singapore 218042.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here