ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில்!

0
570

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் மற்ற கோயில்களை விட சற்று மாறுபட்டது. ஹோக் ஹுவாட் கெங் (Hock Huat Keng) எனும் சீனக் கோயிலின் வளாகத்திலேயே இருந்து எல்லா வகை பூஜை, வழிபாடுகளை ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர். சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா? கேட்பதற்கு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் உண்மை. இந்த கோயிலின் தனி சிறப்பும் இதுதான். ஈ சூன் தொழிற் பேட்டையில் ஹோக் ஹுவாட் கெங் சீனக் கோயில் வளாகத்திலேயே ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்து சமய பக்தர்கள் தாரளமாக வழிபட ஆலய அதிகாரிகளுடன் ஹோக் ஹுவாட் கெங் ஆலய அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்து ஒற்றுமையாக கோயிலை நடத்தி வருகின்றனர்.

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது இவ்வாலயம் என்றாலும், 1930-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ள ஆதார சான்றுகள் உள்ளன. சிங்கப்பூரில் ’கம்போங்’ எனக்கூறப்படும் இயோ சூச் காங் சாலையில் அமைந்துள்ள டிராக்.32(Track.32)-யில் சிறிய மண் குன்றின் மீது ஒரு கருங்கல்லை ஸ்தாபனம் செய்து அதற்கு வீரமுத்து முனீஸ்வரன் என்று பெயரிட்டு வழிபட்டனர். இப்படி தான் உருவானது. பின்னர் கால மாற்றம் மற்றும் சிங்கப்பூரின் நகர புனரமைப்பு பணிகளினால் ஹுவாட் கெங் ஆலய வளாகத்தினுள் குடிபெயர்ந்தது. சீனர்களும், இதனை அன்போடு ஏற்று இடமளித்தனர். இரண்டு மதங்களும் ஒரே ஆலயத்தில் ஒற்றுமையை பேணி காத்து இன்றளவும் திகழ்வது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இரு சமய பக்தர்களுக்கும் ஒற்றுமை பாடத்தை கற்றுக் கொடுத்து வருகிறது என்றால் அது மிகையல்ல!

Address: 523 Yishun Industrial Park.A Singapore-768 7709459.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here