ஸ்ரீலங்கராமாய புத்த கோயில்

0
449

சிங்கப்பூரின் பிரதான சாலையான புனித மைக்கேல் சாலையில்(St.Michael Road) அமைந்துள்ளது இந்த ஸ்ரீலங்கராமாய புத்த கோயில்(Srilankaramaya Buddhist Temple). சிங்கப்பூரில் வசிக்கும் புத்த மதத்தை வழிபடும் இலங்கை மக்களால் இந்த கோயில் 1952-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இலங்கையை அடையாளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேரவாத புத்த கோயில்களில் இதுதான் மிகவும் பழமையான கோயிலாகும்.

இந்தக் கோயிலில் அழகிய ஸ்தூபம், போதி மரம், புத்த விகாரங்கள் மற்றும் சிமா அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 45 அடி உயர புத்த சிலை இந்தக் கோயிலின் பிரம்மாண்டத்தை விவரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உறங்கும் நிலையில் உள்ள புத்தர் மற்றும் ஆள் உயர தேவானம்பியாதிசா எனும் இலங்கை மன்னனின் திருவுருவச் சிலையும் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்தான் இலங்கையில் புத்த மதம் பரவ முழுக்காரணமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

கோயில் வளாகத்தில் மூன்று அடுக்குகளுடன் அமையப் பட்டுள்ள கட்டிடம் ஒன்றில், ஆலய நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகின்றது. அதன் அருகே உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் பிரதான ஆலயம் மற்றும் தியான மண்டபம் உள்ளன. மேலும், ஆலய வளாகம் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் பச்சை பசுமை நிறைந்த தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு இங்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பூன் கெங்(Boon keng MRT) எம்.ஆர்.டி நிலையத்திலிருந்து 10 நிமிட நடை பயணத்தில் இந்தக் கோயிலை அடைய முடியும். புனித மைக்கேல் சாலையில் கோயில் அமைந்துள்ளதால் புனித மைக்கேல் புத்த கோயில் என்றும் இதனை உள்ளூர் மக்கள் அழைப்பது வழக்கம். கோயிலின் முக்கிய விழாக்களாக புத்த பூர்ணிமா, புத்தாண்டு மற்றும் சீன புத்தாண்டுகள் இங்கு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமைதி விரும்பி வரும் ஆன்மிக பக்தர்களுக்கு இந்த இடம் ஒரு சிறந்த ஆன்மிக தளமாக விளங்கி வருகிறது.

Address: 30-C St. Michael’s Road, Singapore 328002

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here