சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிலை

0
337

நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தந்தை சர் ஸ்டாம்ஃபோர்டின் சிலை சிங்கப்பூரின் ராஃபில்ஸ் லேண்டிங் சைட் மற்றும் எம்ப்ரஸ் பிளேஸ் ஆகிய இரு இடங்களில் மிகவும் கம்பீரமாக நிற்கின்றது.

ஜனவரி 29, 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து இறங்கியவர் சர் ஸ்டாம்ஃபோர்ட். போட் குவாய் (படகு துறை) என்கிற இடத்தில் தான் அவர், முதன் முதலாக காலடி எடுத்து வைத்ததைத் நினைவுக் கூறவே அந்த இடத்தில் பளிங்கால் ஆன அவரது திரு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. வளர்ச்சியற்ற ஒரு தீவாக இருந்த சிங்கப்பூரை இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு நவீன பூங்காவாக மாற்றியதில் பெரும் பாங்காற்றியவர் இவர்தான். கைகளை கட்டியவாறு அமைதியுடனும் திட சிந்தனைக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நேர் பார்வையை வீசும் அவரது திருவுருவச் சிலை பல பல பாடங்களை சிங்கப்பூர் மக்களுக்கு சொல்லிக் கொண்டே வருகிறது. சிங்கப்பூரின் 150வது ஆண்டு விழா 1969ல் கொண்டாடப்பட்டது. அப்போது தான் இவரது சிலை இங்கு நிறுவப்பட்டது.

சிங்கப்பூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் இவரது சிலை முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்துச் செல்வது வாடிக்கை. இங்கு உள்ள பளிங்கு சிலை உண்மையில் ஒரு பிரதி. இதன் முதன்மை சிலை வெண்கலத்தால் ஆனது. அது எம்பிரஸ் பிளேசில் உள்ள விக்டோரியா ஹாலில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது. இந்த சிலை பிரபல சிற்பி தாமஸ் உல்னர் என்பவரால் வடிவமைக்கப்பட்டு ஜூன் 27, 1887- ஆம் ஆண்டு இங்கு முதன் முதலாக நிறுவப்பட்டது. இந்த சிலை ஒராங் பெசி என்றும் செல்லப்பெயரிட்டு மலாய் மக்கள் வழங்கி வந்துள்ளனர். இதற்கு இரும்பு மனிதர் என்ற பொருள். சிங்கப்பூரின் இரும்பு மனிதராக திகழ்ந்தவர், இவரது சாதனைகள் சிங்கப்பூர் பாடத்திட்டத்திலும் பாடமாக உள்ளது.

Address: 59 Boat Quay, Singapore 049859

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here