டம்பைன்ஸ் சீன கோயில்

0
514

சிங்கப்பூரின் டம்பைன்ஸ் தெருவில் அமைந்துள்ளது இந்த டம்பைன்ஸ் சீன கோயில். சீனாவில் புத்தரை தாண்டியும் பல கடவுள்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு வழிபடும் சீன மக்களுக்காக கட்டப்பட்ட கோயில்களில் இந்த டம்பைன்ஸ் சீன கோயிலும் ஒன்று.

1992-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்த டம்பைஸ் கோயிலில் உப கோயிலாக 13 கோயில்கள் அங்கம் வகிக்கின்றன. லொயாங் டியான் கோங் டான், ஃபு அன் தியான், ஹோ சி டிங், ஷுன் ஸிங் கு மியோ, ஜி ஸிங் டிங், ஜி யாங் டாங், சி லிங் கோங், ஸின் பா டா போ கோங், லொயாங் டா போ கோங், ஹன் யாங் டா போ கோங், டாம்பைன்ஸ் 9வது மைல்கல் டியான் கோங் டான், டா போ கோங் மற்றும் டி வான் டா போ கோங் அகிய 13 கோயில்களும், கோயில்களுக்கு ஏற்றவாறு தனித்தனி சீன கடவுள்களும் இந்த டம்பைன்ஸ் கோயிலில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளனர். சிங்கப்பூருக்கு வரும் சீனர்கள், தாங்கள் வழிபட்டு வரும் பல தெய்வங்களை ஒரே இடத்தில் இங்கு கண்டு தரிசனம் பெறலாம்.

டம்பைன்ஸ் கோயிலின் பிரதான தெய்வமாக திகழ்வது பிரபு ஜு ஸிங் & லீ கடவுள் தான். மற்ற 8 உப கடவுள்களுக்கும் இங்குள்ள 13 கோயில்களில் இடமளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகின்றது. சீனர்களின் புத்தாண்டு தினங்களில் இந்தக் கோயில் திருவிழாக் கோலம் கொள்ளும். அதிகப்படியான எண்ணிக்கையில், சிங்கப்பூரில் வாழும் சீன மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவர்.

பார்வை நேரம்: காலை 6.30 முதல் இரவு 8.30 வரை

Address: 25 Tampines Street 21, Singapore 529394

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here