தங்கமீன் கலைஇலக்கிய மாதாந்திர சந்திப்பு – பிப்ரவரி 2018

0
526

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தங்கமீன் கலை இலக்கிய வட்டம் நடத்தும் வாசகர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11/02/2018)மாலை 4 மணி அளவில் தோபயோ பொது நூலகத்தில் நடைபெற்றது.

தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் பாலு மணிமாறன் வந்திருந்தோரை வரவேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .முதல் அங்கமாக திருமதி ப்ரியா கணேசன் அவர்கள் தொகுத்து வழங்கிய படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெற்றது

ப்ரியா கணேசன் அவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘பதின் ‘ தொகுப்பில் இருந்து தனக்கு பிடித்ததை பகிர்ந்து கொண்டதுடன் தனது மகனிடம் சிறுவயதில் தான் சொன்ன பழைய சுவாரசியமான பொய்களை இப்போது தனது மகன் நினைவூட்டும் போது தனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கினார் .

வந்திருந்த பார்வையாளர்களில் சிறந்த பார்வையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்து பேசச் சொன்னது நிகழ்ச்சியை சிறப்பாக்கியது திருவாளர்கள் மதிக்குமார் தாயுமானவன்,யாழிசை மணிவண்ணன் ,விஜி ஜெகதீஷ் ,மணிமாலா மதியழகன் ,கி.கோவிந்தராசு,தாம் சண்முகம்,அன்புச் செல்வி,முகைதீன் தங்களுக்கு பிடித்த கவிதை கதைகளை பகிர்ந்து கொண்டனர் இவர்களுடன் மாணவர்களும் மேடைக்கு வந்து தங்களுக்கு பிடித்த கதை,கவிதையை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

இரண்டாவது நிகழ்வாக செல்வி அஸ்வினி செல்வராஜ் அவர்கள் தொகுத்து வழங்கிய குறும்பட அங்கம் இடம் பெற்றது ‘மீள்பார்வை ‘என்ற குறும்படத்தை திரையிட்டு அந்த குறும்படம் முடிவதற்கு 3 நிமிடங்கள் முன்னதாக குறும்படத்தை நிறுத்தி குறும்படம் குறித்த விவாதத்தை நடத்தியது சுவாரசியமாக இருந்தது.பலரும் தங்களுக்கு அது எந்த வகையில் பிடித்தது பிடிக்கவில்லை என்பதையும் விவாதித்தனர்.அதன்பின்னர் முடிவுவரை படம் திரையிடப்பட்டு விவாதம் மறுபடியும் தேறியது அரங்கேறியது இந்த விவாதத்தில் திருவாளர்கள் தாம் சண்முகம் ,மகேஷ் குமார் ,மேஜர் மஜீத் ,தமிழ்ச்செல்வி,விஜி ஜெகதீஷ் உட்பட மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.

இதனைத் தொடர்ந்து திருமதி விஜி ஜெகதீஷ்அவர்கள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக சிங்கப்பூரில் தான் நிதி திரட்டும் பணியை மேற்கொண்டு வருவதை ஒரு காணொளி மூலம் விளக்கி அதன் பின்னர் இந்த இருக்கை தமிழுக்கு ஏன் அவசியம் என்பதையும் வாழும் மொழியாக இருக்கும் இரண்டு செம்மொழிகளில் தமிழும் ஒன்றென்பதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார் .

இந்த மாத சிறப்பு அங்கமாகிய எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் தனக்குப் பிடித்த 3 எழுத்தாளர்களின் 3 கதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் தூயவன் எழுதிய ‘அஞ்சுதல் ‘எழுத்தாளர் பா திருச்செல்வம் எழுதிய ‘ஆண்கள் விடுதி அறை எண் 12 ‘எழுத்தாளர் மாதவன் ஶ்ரீரங்கம் எழுதிய ‘ஒரு பனிக்காலம் ‘இந்த சிறுகதைகள் குறித்த கதை சுருக்கத்தை முதலில் பார்வையாளர்களுக்கு சொல்லி அதனை தொடர்ந்து அந்த கதைகள் எந்தந்த அம்சங்களினால் தனக்கு பிடித்தது என்பதை விளக்கமாக பேசினார் .வழக்கமாக தன்னுடைய பேச்சுக்கு சிறந்த முறையில் முன் தயாரிப்புடன் வரக் கூடிய திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் தன்னுடைய பேச்சில் மீண்டும் அதனை நிரூபித்தார்.பேச்சின் இடையே பார்வையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லி அவர்களை எழுத்தில் மேம்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் வண்ணம் பேசியது சிறப்பு.

இதனைத் தொடர்ந்து இளமை தமிழ் இணைய பக்கத்தில் கதை கவிதை படங்கள் கருத்துரை ஆகியவற்றில் பங்கெடுத்து பரிசுகளை வென்ற மாணவர்கள் இளமை தமிழ் இணையப்பக்கத்தை அகன்ற திரையில் திரையிட்டு அவற்றை படித்து காட்டினர்.இதைத்தவிர மாணவர் எழுதி இயக்கிய தயாரித்த ‘குப்பை’ என்ற தலைப்பிலான சமூக அக்கறையுடன் கூடிய குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்ட பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியது .வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.இறுதியாக இந்த மாத கதை மற்றும் கவிதைகளுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகளை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் வழங்கிட நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு புகைப்படம் எடுத்த இனிய நினைவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
சிறுகதை வெற்றியாளர்கள்
1) திரு மேஜர் மஜீத்
2)திரு கீழை அ.கதிர்வேல்
3)திருமதி மணிமாலா மதியழகன்

கவிதை வெற்றியாளர்கள்
1)திரு யாழிசை மணிவண்ணன்
2)திருமதி சுபா.செந்தில் குமார்
3)திருமதி ப்ரியா கணேசன்

படம் உதவி :தங்கமீன் கலை இலக்கிய வட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here