தியான் ஹாக் கெங்க் கோயில்

0
321


சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள தெலோக் ஆயர் தெருவில் உள்ளது தியான் ஹாக் கெங் கோயில். சீன மொழியான ஹாக் கெங் என்பது சொர்கத்தின் மகிழ்ச்சி எனும் பொருள் கொண்டது. 1842ம் ஆண்டு முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோயில் 100 ஆண்டுகால பழைமையையும் பாரம்பர்யத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரை அருகே இப்படி ஒரு பிரம்மாண்ட கோயிலை உருவாக்கும் போது, கடல் அலைகள் உட்புகாமல் இருக்க கிரனைட் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. பாரம்பரிய தென்சீனாவின் கட்டிடக்கலை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த கோயிலில் ஒரு ஆணிக் கூட அறையப்படவில்லை. பாறைகள், மரங்கள், டிரகன் மற்றும் பீனிக்ஸ் சிற்பங்கள் நிறைந்த இந்த கோயிலின் அழகு தனி சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்தக் கோயிலின் கதவுகளை புலி, சிங்கம் மற்றும் காவல் தெய்வங்கள் காவல் காத்து வருகின்றன. பரந்து விரிந்த இக்கோயிலின் நுழைவுப் பகுதியில் இருபெரும் முற்றங்கள் காணப்படும். சீனாவின் மச்சபோ கோயிலைப் போன்ற உள்கட்டமைப்பு இக்கோயிலின் தனி சிறப்பு. சுற்றுலா பயணிகள் மற்றும் புத்த மத பக்தர்கள் வழிபடுவதற்காக காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இக்கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here