புலி கோபுரம் (Tiger Sky Tower)

0
240


புலி கோபுரம் (Tiger Sky Tower)

புலி கோபுரம், சிங்கப்பூரின் செந்தோசாத் தீவின் மத்தியில் உள்ள இம்பியா பகுதியில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு தலமாக உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி 2004ல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட இந்த வானுயர் கோபுரம் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஸ்பான்சரோடு கட்டப்பட்டதால் இதற்கு கார்ல்ஸ்பர்க் கோபுரம் என்ற பெயர் இருந்தது. பின்னர் 2008ம் ஆண்டில் டைகர் பீர் ஸ்பான்சராக மாறியதால் இந்த வானுயர் கோபுரத்தில் புலியின் ஓவியம் தீட்டப்பட்டு பின்னர் புலி கோபுரம் என அழைக்கப்பட்டு வருகின்றது. வானுயர்ந்த இந்த கோபுரத்தின் உயரம் 110 மீட்டர். அதாவது 360 அடி உயரம் கொண்டது. 2004ல் கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் உள்ள வட்ட வடிவ குளிர் ஊட்டப்பட்ட இருக்கை அமைப்பில் ஏறி அமர்ந்தால், அது மெதுவாக கோபுரத்தின் மேல் லிஃப்ட் ஏறுவது போல் ஏறும். மேலே செல்ல செல்ல சிங்கப்பூரின் மொத்த அழகையும் வானுயர் கட்டிடங்களையும், நிலப்பரப்புகளையும், நீர் நிலைகளையும் கண்டு ரசிக்கலாம். 110 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் 91 மீட்டர் வரை தான் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை தாண்டி இந்தோனேசியாவில் உள்ள ஜோஹர் பஹ்ரு எனும் ஸ்கைலைனையும் இங்கிருந்தே பார்வையிட முடியுமாம். இதன் வட்ட வடிவிலான இருக்கை அமைப்பில் மொத்தம் 72 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் ஹஸ் பார்க் அட்ராக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த பிரம்மாண்ட வானுயர் கோபுரத்தை வடிவமைத்துள்ளது. இதன் மொத்த எடை 197 டன்கள் ஆகும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் இந்த கோபுரத்தில் ஒருமுறை பயணிக்க பெரியவர்களுக்கு 18 சிங்கப்பூர் டாலர்களும் பலமுறை பயணிக்க 23 சி.டாலர்களும் வசூலிக்கப்படுகின்றன. குழந்தைகள் ஒருமுறை பயணிக்க 10சி.டாலர்களும், பலமுறை பயணிக்க 15 சி.டாலர்களும் வசூலிக்கப்படும்.

வடகிழக்கு இரயில் தடத்தில் உள்ள ஹாபௌர் பிராண்ட் இரயில் நிலையத்தில் இருந்து விவோ சிடியில் உள்ள செண்டோசா நிலையத்தில் இருந்து செண்டோசா இரயிலில் ஏறி இம்பியா நிலையத்தில் இறங்கி சுமார் 350 மீட்டர்  நடக்கும் தூரத்தில் இங்கு சென்று அடைய முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here