உரிமம் இல்லாத உல்லாச விடுதி

0
284

உம்மைப் பார்த்தப் போது உருகி உருக்குலைந்து
உயிர் விட்டேனேடி,எனது ஏற்கனவே உடைந்த போன உள்ளமே
மூன்றாண்டுகளில் முன்னேறி பிள்ளைக்குட்டிகளோடு
மூக்கனிச்சுவைமிக்க இல்லற வாழ்க்கையைச் செவ்வென வாழாமல்
இங்கு எச்சில் பாத்திரங்களைக் கழுவிதான் உம் வயிற்றைக் கழுவிக்
கொண்டிருக்கிறாயோ
கண்டவன் உரசி போவான், காமகொடூரப் பயல்கள் எல்லாம் அதற்கு
மேலும் கேட்பான்களே,
நீ படித்த கல்விச் சான்றிதழ்கள் எங்கே?
உம்மை என்னிடமிருந்து பிரித்துப்போன அந்த மன்னவன் எங்கே?
உம் கண்களின் பின்னால் ஒளிந்திருக்கும் வலி உமக்கு 3 குழந்தைகள்
என்பதே
சொல்லாமல் விம்மிக்கின்றதே
நொண்டி கொண்டிருக்கும் உம் காலில் என் தங்கக் கொலுசு நல்ல
வேளையாக இல்லை
இல்லையென்றால் அது வைக்கும் ஒப்பாரியைக் கேட்க மீதம் உயிர்
எமக்கு இல்லை
காதலில் தோற்ற போன எமக்கு ‘ இந்த’ வாழ்நாள தண்டனை
போதுமடி செல்லமே!

Previous article
Next articleதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு
Kalaivani Ilango
சிங்கப்பூர் கல்வி அமைச்சில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கலைவாணி சிங்கப்பூர் நாளிதழ்கள், மாத இதழ்கள், இணைய இதழ்கள் தொடர்ந்து எழுதி வருபவர். கதை சொல்லும் பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி வரும் கலைவாணி பேச்சாளர் மன்றங்களிலும் தீவிரமாக செயலாற்றி வருபவர். எதிர்கால தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நுட்பங்களை ஆர்வத்துடன் கற்றுவரும் கலைவாணி அவற்றை இளையோர்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here