வசந்தம் வந்தது – மேஜர் ரமீஜா மஜீத் (பிப்ரவரி 2018)

0
446

மேஜர் ரமீஜா மஜீத்

அது சிங்கப்பூரின் ஒரு நேர்த்தியான காலைநேரம்..
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதியோருக்கான குடும்ப நலத்திட்ட ஆலோசனையின்
சந்திப்பில் சுல்தான் தன் மனைவியுடன்கலந்துக்கொள்ள வந்திருந்தார்.
காத்திருப்புக்குப்பின் அவர்களின் நேரம் வந்தபோது, இருவரும் வந்தமர்ந்து,
மனநலமருத்துவரான, தமிழ் ஆலோசகரிடம் தங்களைஅறிமுகப்படுத்திக்கொண்டனர்.
ஆலோசகர் புன்னகையுடன் பேச்சைத்தொடங்கினார்… …”இன்றைய காலக்கட்டத்தில்
பெரும்பாலான தம்பதிகள் ஒருவருக்கொருவர்துணையாய் இல்லாமல் இருதுருவங்களாய்
வாழும் அவலம்.. அவரவருக்கான வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்த
காரணங்களைஅறிந்தால், அவற்றுக்கான பரிகாரத்தைப்பகிரலாம்.. அதற்கானதே இந்த
சந்திப்பு. எனவே இருவரும் மனந்திறந்து, தயக்கமின்றிப்பேசுங்கள்.. இங்கு
பகிர்ந்துக்கொள்பவை ரகசியமாகவேயிருக்கும்..” ஆலோசகர் புன்னகைத்தார்.
சிலகணங்கள் தயங்கியவாறு அங்குமிங்கும் பார்த்தபடி.. பின்னர் பிகுபண்ணிவிட்டு,
ஆலோசகரின் உந்துதலால் சுலைமான் பேசினார்..
“….. கம்போங் கேலாங்கில் வளர்ந்தோம்.. வயது வந்ததும் பெற்றோர் சம்மதத்துடன்
திருமணமானது.. இரண்டு மகன்கள்.. மணமாகி இருவரும்வீடுவாங்கிப் போய்விட்டார்கள்.
எங்கள் குடும்பத்தில் ஆண்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருந்தது. ஐந்தாறு வருடங்களாக..
கொஞ்சங்கொஞ்சமாக.. மனைவியோட குணம்மாறிடுச்சு.. அடக்கமான பேச்செல்லாம்
கடந்துப்போயி.. எதற்கெடுத்தாலும் எதிர்த்துப்பேசியே வாழ்க்கையை நரகமாக்கிட்டாங்க..
ஒப்புக்குபேசாமலே.. வாழ்ந்துட்டு இருக்கிறோம்.. ” என்று குற்றச்சாட்டுகளை சுலைமான்
நிறுத்தவும், மனைவியும் ஆரம்பித்தார்.. அவரிடமிருந்தஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகளை
அடுக்கினார்..
… இவ்வளவு நேரம் இருவரையும் முழுதாய் கேட்டுக் கொண்டிருந்த ஆலோசகர் பேசலானார்..
” நீங்கள் இரண்டுப்பேருமே சிங்கப்பூரர்கள்.. சொல்லனுமென்ற அவசியமேயில்லை..
குடியிருப்பாளர்கள் சத்தம் போட்டுக்கொண்டு, முறைத்துக்கொண்டு வாழ்ந்தால்
அக்கம்பக்கத்தவர்கள் நம்மைப்பற்றி மட்டமாக கருதுவார்களல்லவா..? நம்முடைய
நடத்தையால்.. நம்இனத்தையே தவறாக நினைக்க வாய்ப்பளிக்கலாமா..? தன்னுடைய
சந்ததிகளை நேசிக்கிற எவரும் அவர்களுக்கு பாதிப்பு உண்டாக்குகின்றஎக்காரியத்தையும்
செய்யத்தயங்குவார்கள்.. எனவே சுமுகமாக வாழ்ந்திடுங்கள்.. முயன்றால் முடியும்.. நம்முடைய
மனதில் இருக்கக்கூடியஆனவம்தான் பொருத்துக்கொள்ளவோ, தாங்கிக்கொள்ளவோ
முடியாமல் ஆக்கிவிடுகிறது.. எனவே உங்களுக்குள்ளே ஆனவம் கூடவேகூடாது..
ரெண்டுப்பேரும் சண்டைப்போட்டு எதிர்த்துப்பேசுவதால் ஏதாவது பலனிருக்கிறதா..? யார்

ஜெயிக்கிறாங்களென்ற போட்டியா..? அதனால்ஆம்பள.. பொம்பளை..ன்னு பிரிச்சு வைத்து
யார் அடங்கிப்போறதுன்னு விவாதமா நடத்துறது..? ” ஆலோசகர் உற்றுப்பார்த்து
சிறுஇடைவெளிக்குப்பின் தொடர்ந்தார்..
” சுலைமான் உங்களுக்குத் தெரியாததல்ல.. பெண்களுக்கு மாதவிடாய் நின்று ‘மேனோபாஸ்’
தொடங்கியபின் அவங்களோட ‘ஹார்மோன்’ சுரப்பின் மாற்றத்தால்
பெரும்பான்மையோருடைய சுபாவத்துலேயும் மாற்றம் உண்டாகி, உணர்ச்சிவயப்படுறது,
ஆக்ரோஷமடையிறதுன்னுமனோரீதியான பாதிப்புக்கு ஆளாவது சகஜம்.. அப்படிப்பட்ட
நேரத்துலே.. கூடவே வாழ்ந்த புருஷன்தான் புரிதலுடன் அனுசரித்து.. ஆதரவையும்,
அரவனைப்பையும் காட்டனும்..” மெல்ல புன்னகைத்து பார்வையிட்ட ஆலோசகர்
தொடர்ந்தார்..
” இவ்வளவு நேரம் பேசியதில் தெரிவித்த உங்கள் பிரச்சினைகள் யார் வாழ்விலும்
நடக்காததல்ல.. எல்லாமே சகஜமானதுதான்.. அவங்களிடம்நிறைய நல்ல விஷயங்கள்
இருக்கு.. அந்த நல்லவைகளை உறக்கச் சொல்லுங்க.. அவங்களும் சந்தோஷமாயிருப்பாங்க..
நீங்களும்சந்தோஷத்தை உணருவீங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் நேசிப்போட எப்படி விட்டுக்
கொடுக்கிறதுன்னு யோசிங்க.. உங்களோட அனுகுமுறையைமாற்றிக்கொள்ள
முயற்சிப்பண்ணுங்க.. எல்லாம் சரியாகிடும்.. வாழ்த்துக்கள்..”
ஆலோசகர் சுலைமானின் கைகளைக் குலுக்கி, மனைவிக்கு கைகளைக் கூப்பினார்..
சிறிது நேர மௌனத்திற்குப்பின் இருவரும் எழுந்தனர்.. ‘சாரி’.. தலையைக் கவிழ்த்துக்
கொண்டு உச்சரித்தவர், தன் மனைவியின்தோளையணைத்துக் கொண்டு அந்த அறையை
விட்டு உறுதியுடன் வெளியேறினார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here